புதியவை :

Grab the widget  Tech Dreams

03 ஜூலை 2010

வாகனத்தை ஒப்படைக்க லஞ்சம் : இன்ஸ்பெக்டர் கைது


காளையார்கோவில் : டூவீலரை திரும்பத் தருவதற்காக 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் கைது செய்யப்பட்டார்.

காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த சித்த வைத்தியர் அன்புமலைகண்ணன் (76). இவரது பேத்தி நவபாரதி, கணவர் சுகுமார். குடும்பத் தகராறில் நவபாரதி தாத்தா வீட்டில் வசிக்கிறார். கடந்த 13 ம் தேதி, அங்கு வந்த சுகுமார், மனைவியுடன் சண்டையிட்டு, அங்கிருந்த ஹோண்டா பைக்கை எடுத்துச் சென்றார்.

இதை கண்டுபிடித்துத் தருமாறு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம், அன்புமலைகண்ணன் புகார் செய்தார். வாகனத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் திரும்ப ஒப்படைக்க 11 ஆயிரம் ரூபாய் தருமாறு அன்புமலைகண்ணனிடம் கேட்டார்

இதன்படி, கடந்த 17 ம் தேதி இன்ஸ்பெக்டரிடம் 6,000; போலீசாருக்கு 3,000 ரூபாய் கொடுத்தார்.

பேசியபடி, மேலும் 2,000 ரூபாய் தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் மிரட்டினார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கலாவதியிடம் அன்புமலைகண்ணன் புகார் செய்தார். நேற்று மாலை 6.45 மணிக்கு ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம், பணத்தை கொடுத்தார்.

இதை கண்காணித்த டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா, போலீசார் மகேந்திரன், மைக்கேல், சிவக்குமார் கொண்ட குழு செங்குட்டுவனை கையும் களவுமாக பிடித்தது.

1 கருத்து: