கிருஷ்ணகிரி: ""தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர சான்று வழங்க வி.ஏ.ஓ.,க்கள் லஞ்சம் வாங்குகின்றனர்,'' என, தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் குற்றம்சாட்டினார்.
தமிழக்தில் உள்ள பல மாவட்டங்களில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதில், அதிக அளவில் தொழிலாளர் நல அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதில் தொழிற்சங்க நிர்வாகிகளும் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் வசதி படைத்தவர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர்.
நலவாரியங்களில் உறுப்பினராக சேர வி.ஏ.ஓ.,க்களிடம் சான்று பெறுவது நடைமுறையில் உள்ளது. பல இடங்களில் இந்த சான்று வழங்கிட வி.ஏ.ஓ.,க்கள் தொழிலாளர்களிடம் லஞ்சம் வாங்குகின்றனர். அதனால் இந்த முறையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என்றார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக