புதியவை :

Grab the widget  Tech Dreams

03 ஜூலை 2010

எல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி : இரு ஆசிரியைகள் "வெறியாட்டம்'


பண்ருட்டி : பண்ருட்டியில் எல்.கே.ஜி., குழந்தையை பிரம்பால் அடித்த ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாகூர் வீதியைச் சேர்ந்தவர் முஸ்தபா பராக். இவரது மகள் தன்சிராபெல்லா (3). கடந்த 20 நாட்களுக்கு முன், 2,800 ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி பண்ருட்டி தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்தனர்.

பள்ளியில் குழந்தை நேற்று முன்தினம் குறும்பு செய்ததால் ஆசிரியை, பிரம்பால் அடித்துள்ளார். அதன் பிறகும் குழந்தை குறும்பு செய்யவே பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியையும் தன்சிராபெல்லாவை பிரம்பால் அடித்தார். மதியம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த குழந்தையை பெற்றோர் விசாரித்ததில், ஆசிரியை பிரம்பால் அடித்தது தெரியவந்தது. உடலில் கை, கால், முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் பிரம்படி தழும்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதைத் தொடர்ந்து தங்களது உறவினர்களுடன் பள்ளி முன் திரண்டனர். குழந்தையை தாக்கியது குறித்து விளக்கம் கேட்டு முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் உரிய பதில் கூறாமல் டி.சி., கொடுத்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர் அதை அங்கேயே கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடித்த ஆசிரியைகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் டி.சி., கொடுத்த பள்ளிநிர்வாகத்தை என்ன சொல்லுவது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக