புதியவை :

Grab the widget  Tech Dreams

13 ஜூலை 2010

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மானாம்பதி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (58). இவருக்கு சொந்தமாக காஞ்சிபுரம் அடுத்த வேலிங்கபட்டரை பகுதியில் வீடு மற்றும் காலி இடம் உள்ளது. அவரது இடத்தில் அருகில் வசிப்பவர் சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிவானந்தம் தனது வீட்டை சுற்றியுள்ள நிலத்தை அளப்பதற்காக சர்வேயரை அணுகினார்.

அவர் கம்ப்யூட்டர் பட்டா கொண்டு வரும்படி கூறியுள்ளார். அதை பெறுவதற்காக சிவானந்தம் ஓரிக்கை கிராம நிர்வாக அலுவலர் ராமன் (54) என்பவரை அணுகினார். அவர் வீட்டுப் பத்திர நகல், வில்லங்க நகல் ஆகியவற்றை கேட்டு வாங்கினார். நேற்று காலை சிவானந்தம் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தார். அவர் "பட்டா வந்து விட்டது. 500 ரூபாய் பணம் கொடுத்து விட்டு பட்டாவை பெற்றுச் செல்லுங்கள்' என கூறியுள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத சிவானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், கங்காதரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தத்திடம் வழங்கினர். அவர் அந்தப் பணத்துடன் மாலை 4 மணிக்கு ஓரிக்கை சென்றார். கிராம நிர்வாக அலுவலர் ராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பணத்தை கொடுத்தார். அவரும் பெற்றுக் கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக