10 ஜூலை 2010
ரூ.500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை.
தூத்துக்குடி, : தூத்துக்குடி அருகே பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
ஓட்டப்பிடாரம் வட்டம் வடக்கு ஆரைக்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருணாசலம் (54). இவர், தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக, புதியம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலரான கருப்பசாமியை (56) அணுகியுள்ளார். அப்போது கருப்பசாமி, ரூ. 500 லஞ்சம் கேட்டாராம். இது குறித்து அருணாசலம் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தாராம்.
இதையடுத்து 22.8.2006-ம் தேதி ரூ.500 பணத்தைப் பெற்ற போது கருப்பசாமியை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர்மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை தலைமை குற்றவியல் நடுவர் வெங்கடசலபதி விசாரித்து, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக