திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர். 1996&97&ம் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 1999&ம் ஆண்டு பிப்ரவரியில் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்றார்.
அவர் கொண்டு வந்த கணக்குகளை வேலூர் மண்டல துணை இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை ஆய்வாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
அப்போது, ‘தகவல் சரியாக இல்லை. உன் சம்பளத்தில் பிடித்தம் (ரெக்கவரி) செய்யப்படும்.
ரூ.2ஆயிரம் கொடுத்தால் விட்டுவிடுகிறேன்’ என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.
ரூ500கொடுக்க பன்னீர்செல்வம் சம்மதித்து கணக்கை இறுதி செய்துவிட்டு சென்றார். ஆனால், பணத்தை பன்னீர்செல்வம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ஆறுமுகம் மூன்று முறை கடிதம் அனுப்பியும் பன்னீர்செல்வம் கண்டுகொள்ளவில்லை.
பின்னர், ‘பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்’ என்று மிரட்டி கடிதம் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின்படி, பன்னீர்செல்வம் கொடுத்த பணத்தை வாங்கியபோது ஆறுமுகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி முரளிசுந்தரம் நேற்று தீர்ப்பு கூறினார்.
கடிதம் அனுப்பி லஞ்சம் வாங்கிய ஆறுமுகத்துக்கு 37 மாதம் கடுங்காவல் தண்டனையும்,
ரூ 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
10ஆயிரத்தை ஆறுமுகம் உடனே செலுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக