அரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.
மிக்க மகிழ்ச்சி ... என்னுடைய வாழ்த்துகளும் உங்களுக்கு.
பதிலளிநீக்குநன்றி - இரவீ
பதிலளிநீக்குஆஹா நான் ஒன்னு குடுத்தா அதை சுவர் பூரா...கலக்கல் படம் . சூப்பர் உதயம்.
பதிலளிநீக்குஇன்னும் கிடைக்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்