புதியவை :

Grab the widget  Tech Dreams

10 ஜூலை 2010

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது



சென்னை அருகே1 செங்கல் சூளை மேலாளரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.1 1/2 லட்சம் சிக்கியுள்ளது. கும்மிடிப்பூண்டியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தொழிற்சாலை ஆய்வாளர் இசைமணி சோதனை நடத்தினார். அப்போது செங்கல் சூளையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, இதனை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்பி னார். இதனை பெறறுக் கொண்ட, செங்கல் சூளை மானேஜர் மார்க்கண்டேயன், இதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

இது கையில் கிடைத்தது. ஆய்வாளர் இசைமணி, மார்க் கண்டேயனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். நீங்கள் அனுப்பிய பதில் நோட்டீஸ் திருப்திகர மாக இல்லை. எனவே ரூ.20 ஆயிரம் பணத்துடன் கிண்டி யில் உள்ள அலுவலகத்துக்கு வாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன, மார்க்கண்டேயன் அலுவலகத்துக்கு வந்து இசை மணியை சந்தித்தார்.

அப்போது, மார்க்கண்டே யன் நீங்கள் கேட்கும் பணம் அதிகமாக உள்ளது. இவ்வ ளவு பணத்தை என்னால் தர இயலாது என்று கூறினார்.நான் எனக்காக மட்டும் இந்த பணத்தை கேட்க வில்லை. எனது மேல் அதிகா ரிக்கும் இதில் பங்கு கொடுக்க வேண்டும்.

நீங்கள் வேண்டு மானால், தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் கணேசனிடம் பேசுங்கள் என கூறிய இசைமணி, மார்க்கண் டேயனை அவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அதிகாரி கணேசன், ரூ.15 ஆயிரம் ரூபாயை இசைமணியிடம் கொடுத்து விடுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

மார்க்கண்டேயன் இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இணை இயக்குனர் சுனில்குமார், சூப்பிரண்டு லட்சுமி ஆகியோர் 2 அதிகாரிகளையும், பொறி வைத்து பிடிக்க உத்தர விட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திர வரதன், குமர குருபரன், லட்சுமி காந்தன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொழிற்சாலை ஆய்வாளர் கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

ஆய்வாளர் இசைமணியின் வீடு அண்ணாநகர் வசந்தம் காலனியில் உள்ளது. செங்கல் சூளை மானேஜர் கார்த்திகே யனிடம் தனது வீட்டு அருகே பணத்தை கொண்டு வருமாறு இசைமணி கூறியிருந்தார். அங்குள்ள காஞ்சி பேக்கரி அருகே இசைமணி காத்திருந்தார்.

அங்கு வந்த கார்த்திகேயன் ரூ.15 ஆயிரம் லஞ்ச பணத்தை இசைமணியிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து இசைமணியை கைது செய்தனர்.

அதே பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த துணை தலைமை ஆய்வாளர் கணேசனும் கைது செய்யப்பட்டார். இரு வரது வீடுகளிலும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணேசனின் வீட்டில் கணக்கில் வராத ரூ.1 1/2 லட்சம் பணம் சிக்கியது. கட்டுகட்டாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

இது லஞ்சப்பணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக