புதியவை :

Grab the widget  Tech Dreams

27 ஜூலை 2010

சினிமா பார்க்க லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி கைது.


சென்னை : சினிமாவைப் பார்த்து தணிக்கைச் சான்று வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தணிக்கைத் துறை அதிகாரி ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார்.

புதிய சினிமா படம் ஒன்றின் தணிக்கைக்காக, தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தணிக்கை அலுவலகத்தில் விண்ணப்பித்தார்; அதற்கான 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் செலுத்தினார். ஆனால், தணிக்கை அதிகாரி ராஜசேகர், நீண்ட காலம் ஆகியும், படத்தைப் பார்க்க வராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது, படம் பார்க்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமெனக் கேட்டார்.

இதுகுறித்து சி.பி.ஐ.,யில் கோவிந்தராஜ் புகார் செய்தார். நேற்று மாலை லஞ்சப் பணத்தை வாங்கிய போது, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ராஜசேகர் கையும், களவுமாக சிக்கினார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக