புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜூலை 2010

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா? வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

வீடியோவில் இன்ஸ்பெக்டர் இந்திராணி இடம்பெற்ற காட்சி http://www.dinamalar.com/Video_Inner.asp?News_id=573&cat=32


திருப்பூர்:
இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்ட சம்பவத்தில், பேனா காமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் இந்திராணி. கடந்த சில மாதங்களாக திருப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பணியையும் கவனித்து வந்தார்.


திருப்பூர் காப்பகத்தில் குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரியாக இவர் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி பிரபாவதியின் தரப்பில் திருப்பூர், கரட்டாங்காட்டை சேர்ந்த சரவணன் (33) என்பவர் ஆஜராகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சரவணனுக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடைக்கு இன்ஸ்பெக்டர் இந்தி ராணி சென்றுள்ளார்.
அங்கு சரவணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் பணம் கொடுத்ததை வீடியோ சுப்பிரமணியம் என்பவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.


தொடர்ந்து வீடியோவில் பதிவு செய்துள்ளதை காட்டி, இன்ஸ்பெக்டர் இந்திராணியை வீடியோ சுப்பிரமணியம் (50), முருகேசன் (32), சையத் ஆதில் (38), சண்முகம் (32), மணி (40) மற்றும் சரவணன் (33) ஆகியோர் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்ஸ்பெக்டரை அவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இது தொடர்பாக அப்பகுதியினர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் வீடியோ சுப்பிரமணியம் உட்பட 7 பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர். இது தொடர்பாக இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக சுப்பிரமணியம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுப்பிரமணியம் வீட்டில் போலீசார் ரெய்டும் நடத்தினர்.


இந்நிலையில், அன்று பதிவான வீடியோ காட்சிகளின் ஒரு பகுதி வெளியாகியுள்ளது. பேனா காமி ராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள் சுமார் 5 நிமிடம் வரை ஓடுகிறது. வீடியோ காட்சிகளில் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.


இருப்பினும் தனியார் காப்பக நிர்வாகி பிரபாவதி கைது செய்யப்பட்ட வழக்கில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் வகையில் அவர் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் போலீசாரிடமும் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. அருண் கூறுகையில், “வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தன்னை மிரட்டுவதாக இன்ஸ்பெக்டர் போலீசில் புகார் அளித்தார். அதனை உறுதி செய்யும் வகையில் அந்த வீடியோ காட்சிகள் உள்ளன. அதில் உள்ள ஆடியோ உண்மையானது தானா என்பது தொடர் பாக விசாரணை நடந்து வருகிறது. உண் மையான ஆடியோவா அல்லது எடிட்டிங் செய்யப்பட் டதா என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். லஞ்சம் வாங்குபவரை மிர ட்டி லஞ்சம் வாங்கினால் அது சரியாகி விடாது. மிரட் டிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உண்மை என நிரூபணம் ஆனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,“ என்றார்.



தாமதமாய் வெளியானது ஏன்?


கடந்த 23ம் தேதி நடந்த சம்பவ காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ காட்சிகள், 5 நாட்களுக்கு பின்னர் நேற்று வெளியாகியுள்ளது. 5 நாட்கள் தாமதமாக வெளியிடப்பட்டது ஏன் என்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வீடியோ சுப்பிரமணியத்தின் தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டவை என்றும், வீடியோவில் ஆடியோவை அவர்களுக்கு ஆதரவாக எடிட்டிங் செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த வீடியோ காட்சிகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக