புதியவை :

Grab the widget  Tech Dreams

08 ஜூலை 2010

ராணுவ தொழிற்சாலை வாரியத்திலும் ஊழல்.


புதுடில்லி: ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய ஊழலில் ஆறு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

ராணுவ தளவாட தொழிற்சாலை வாரிய டைரக்டர் ஜெனரலாக இருந்தவர் சுதிப்தா கோஷ். இந்த தொழிற்சாலைக்கு தேவையான பணியாளர்களை நியமிப்பது, பணி மாற்றம் செய்வது, தளவாட தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்குவது, சப்ளை செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் சுதிப்தா கோஷ் ஏராளமான ஊழல் செய்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக 11 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் சி.பி.ஐ., கடந்த ஆண்டு 2,700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த ஊழல் வழக்கில் டில்லியை சேர்ந்த டி.எஸ்.கிசான் நிறுவனமும், லூதியானாவில் உள்ள ஆர்.கே.மிஷின் டூல்ஸ் நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகத்திடம் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் கைனடிக்ஸ் நிறுவனமும், இஸ்ரேல் மிலிடரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், சூரிஜ் நகரில் உள்ள ரீன்மெட்டல் ஏர் டிபன்ஸ், ரஷ்யாவில் உள்ள கோஆபரேஷன் டிபன்ஸ் ஆகிய நிறுவனமும் இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகத்திடம் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக