புதியவை :

Grab the widget  Tech Dreams

10 மே 2010

10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது.தூத்துக்குடி : வல்லநாட்டில் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

நெல்லையை சேர்ந்த சிவபாரதி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில்உலர்மின் கலவையகம் கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு கொடுக்க வல்லநாடு மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளளார்.

மின் இணைப்பு கொடுக்க அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரியும் திருப்பதி(44) என்பவர் ரூபாய்.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து சிவபாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதனைதொடர்ந்து சிவபாரதி திருப்பதியிடம் பேசியபடி முதல்கட்டமாக ரூபாய். 10 ஆயிரம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியை கைது செய்தனர். இதனைபார்த்த திருப்பதி லஞ்ச பணத்தை தனது தொண்டைக்குள் போட்டு விழுங்க முயன்றார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை தொண்டைக்குள் இருந்து எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக