
சத்திரக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில்உள்ள போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 19 ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பத்திர எழுத்தர்கள் சாகுல் ஹமீது 5,680, ஷாஜகான் 5,100, அசோக்குமார் 8,000 ரூபாய் வைத்திருந்தனர். சோதனையில் இவர்கள் முறையாக கணக்கு காட்டாததால், இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், சார்பதிவாளர் விஜயாவிடம் கணக்கில் வராத 440 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.இரவு 8.30 மணிக்கு பின்பும் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாவட்ட தணிக்கை குழு ஆய்வாளர் ராஜா இன்று கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக