05 மே 2010
தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை.
திருநெல்வேலி :தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் புரள்வது குறித்து புகார்கள் வருகின்றன.
தென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்கால் உள்ளிட்டபோலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சார் பதிவாளர் கஸ்தூரி, இளநிலை உதவியாளர் பீர்முகம்மது, அலுவலக உதவியாளர் காதர்மைதீன் ஆகியோர் இருந்தனர். கூடுதல் பணிக்காக அதிகாரிகளே பணியமர்த்திக்கொண்ட மூன்று வெளிநபர்களும் பணியில் இருந்தனர்.
சோதனையில் 22 ஆயிரத்து 565 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதற்கு அதிகாரிகளால் கணக்கு காண்பிக்க முடியவில்லை. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் மீதும் துறைவாரியான நடவடிக்கை பரிந்துரைக்கும் வகையில் வழக்குபதிவு செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக