மதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு பைக்கில் வந்தார்.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. இன்சூரன்ஸ் பெறுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் "மிஸ்ஸிங் சர்ட்டிபிகேட்' கேட்டு சண்முகநாதன் மனு செய்தார்.சான்று வழங்க 2,500 ரூபாய் லஞ்சம் தரும்படி இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரன் கேட்டனர். 1,500 ரூபாய் தருவதாக சண்முகநாதன் ஒப்புக்கொண்டார். கடந்த மே 12ல் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோர்ட் உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யின் ஜாமீன் மனுக்களை உதவி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக்காவலை ஜூன் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி (பொறுப்பு) சேவரின் அருள் பெலிதா உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக