27 மே 2010
பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôர் சோதனை
நாகர்கோவில், மே 27: பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 15,420 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, அரசு உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
நாகர்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. சுந்தரராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பீட்டர்பால்துரை, தர்மராஜ் உள்பட போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ. 15,420 கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சார்பதிவாளர் நூர்ஜஹான் (48), இளநிலை உதவியாளர் ரேணுஜா (29), அலுவலக உதவியாளர் சந்திரபாபு (57), ஏஜெண்டுகள் நாகராஜன் (35), தம்புரான் (42), கண்ணன் (52) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக