13 மே 2010
800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம சேவகர் கைது
மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நிதியுதவி வழங்க 800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வேடந்தாங்கலைச் சேர்ந்த ஸ்ரீதர் மனைவி தேவி. இவர், திருமண நிதியுதவி பெற அரசிடம் விண்ணப்பித்தார். சமீபத்தில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வந்தது. அதை பெறுவதற்காக அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கிருந்த கிராம சேவகர் ஜெயபத்மினி(எ)சாயல்ராணி(56) திருமண உதவித் தொகைக்கான காசோலையை வழங்க 800 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து தேவி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன் ஆகியோர் விசாரித்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தேவியிடம் கொடுத்தனர்.
அவர் நேற்று மாலை 5 மணிக்கு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றார். ஜெயபத்மினியிடம் போலீசார் வழங்கிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அவர் பெற்றுக் கொண்டதும், மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக