26 மே 2010
கோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
கோவை : கோவை மாநகராட்சி கணக்கு அலுவலர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்படும்.
இப்பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை காசோலையாக பெறுவர்.
பணிகள் முடித்து, காசோலை பெற செல்லும் ஒப்பந்ததாரர்களிடம், மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிவிநாயகம்,லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா, இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ஞானசேகர், உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கணக்கு அலுவலர் அறையை, நேற்று மாலை சோதனை செய்தனர்.
இதில், கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. மேலும், அலுவலக உதவியாளர் நடராஜ் 22 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் புண்ணியவதி 4,000 ரூபாயும் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக