12 மே 2010
பல்லடத்தில் லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது
பல்லடம் : கடை நடத்துவதற்கு, லைசென்ஸ் வழங்க 3,750 ரூபாய் லஞ்சம் கேட்ட பல்லடம் வணிகவரித்துறை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிப்புதூர் சூரியாநகரைச் சேர்ந்தவர் செல்வமணி(32). இவர், கடை நடத்துவதற்கு லைசென்ஸ் பெற, பல்லடம் வணிகவரித்துறை துணை வணிகவரி அலுவலர் அலுவலகத்தில், வணிகவரித் துறை உதவியாளர் சேமக்குமாரிடம் (40) கடந்த 5ம்தேதி விண்ணப்பித்தார்.
அப்போது லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தினார். ஆனால், 3,750 ரூபாய் லஞ்சம் தந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும் என, செல்வமணியிடம் சேமக்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து, செல்வமணி கோவை லஞ்சஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, செல்வமணி ரசாயனப்பொடி தடவிய, 3,750 ரூபாயை சேமக்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், உன்னிகிருஷ்ணன், சுந்தர்ராஜ், கருணாகரன், ஜெரால்டு ஆகியோர் சேமக்குமாரை பிடித்தனர். பின்,வணிகவரித்துறை அறலுவலகத்தில் இருந்த முக்கிய பைல்களை ஆய்வு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்து சேமக்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க கோவை அழைத்து சென்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக