புதியவை :

Grab the widget  Tech Dreams

09 அக்டோபர் 2009

ஜெயங்கொண்டம் சார்பதிவாளர் கைது
அரியலூர்: பவர் பத்திரம் பதிவிற்கு, விவசாயிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உள்ளிட்ட இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாரதி. தனக்கு சொந்தமான நிலத்தை, தாயார் தமிழரசி பெயருக்கு பவர் பத்திரம் பதிவு செய்ய, ஜெயங்கொண்டத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். "பவர் பத்திரம் பதிவு செய்ய, 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும்' என, சார்பதிவாளர் கோபாலன் கேட்டதால், இதுபற்றி திருச்சியிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கூறினார்.


அவர்கள் அறிவுரையின்படி, நேற்று காலை, சார்பதிவாளர் கோபாலனிடம் 500 ரூபாய் கொடுத்தார். பாரதியிடம் லஞ்சம் வாங்கிய கோபாலன் (56), அவருக்கு உடந்தையாக இருந்த அலுவலக எழுத்தர் காமராஜ் (40) ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக