புதியவை :

Grab the widget  Tech Dreams

08 அக்டோபர் 2009

ஸ்ரீபெரும்புதூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
ஸ்ரீபெரும்புதூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கணக்கில் வராத பணம் 4,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


ஸ்ரீபெரும்புதூர் செட்டித் தெருவில் சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளது. சார்-பதிவாளராக ரவிச்சந்திரன் உள்ளார். நேற்று மாலை 4.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில், சார்-பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையின்போது, கணக்கில் வராத பணம் 4,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக