புதியவை :

Grab the widget  Tech Dreams

04 அக்டோபர் 2009

ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய, சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்நாடு முழுவதும், ஊழல் பெரிய பிரச்னையாக உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஊழல் நடவடிக்கைகள் உள்ளன. ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில், நீதிபதிகள், வக்கீல்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளை கொண்ட ஒரு குழுவை உருவாக்க வேண்டும். கண்காணிப்பு முறையில் உள்ள குறைபாடுகள், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதற்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. லஞ்சம் கேட்பதும், லஞ்சம் பெறுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது. இதை, அடிப்படை மனித உரிமை மீறலாக கருத வேண்டும்.
ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற அரசு அதிகாரிகள், சட்ட விரோதமாக குவித்து வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். ஊழல் வழக்குகளில் சாட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அளவுக்கு அதிகமான சாட்சிகளை கையாளுவதால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாவதற்கு மிகவும் தாமதம் ஏற்படுகிறது. ஊழல் தொடர்பாக மட்டும் 9,000 வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில், தாமதம் ஏற்பட்டால், விசாரணையின் தீவிரம் குறைந்து விடும். ஏராளமான சாட்சிகளிடம் விசாரிப்பதற்கு பதிலாக வலுவான ஒரேயொரு சாட்சியிடம் மட்டும் விசாரணை நடத்தும் வகையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
ஊழல் வழக்குகளில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு, நிர்வாகத்தினரிடமிருந்து முறையான அனுமதி பெற வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன. உயர் அதிகாரிகள் இதற்கான அனுமதியை தர மறுக்கின்றனர். மேலும் சிலர், அனுமதி கொடுப்பதற்கு தாமதம் செய்கின்றனர். ஒரு நபருக்கு எதிராக ஊழல் விசாரணையை துவங்குவதற்கு போதிய சாட்சியங்கள் இருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நாடு முழுவதும் 71 புதிய சி.பி.ஐ., கோர்ட்டுகள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசினார்.

2 கருத்துகள்:

  1. லஞ்சத்தை பற்றியான உங்கள் கோபம் அருமை தோழா..........
    தொடருங்கள் நண்பரே..........!

    பதிலளிநீக்கு