புதியவை :

Grab the widget  Tech Dreams

25 அக்டோபர் 2009

லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியும் : சொல்லுகிறார் கடலூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வள்ளுவன்திருப்பூர்: ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. திருப் பூர், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூட்டமும், புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடந்தது. மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.கடலூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் வள்ளுவன் பேசியதாவது:எதிர்காலத்தில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் கடமை, இன்றைய மாணவர்களுக்குத்தான் உண்டு. முடியாது என்ற எண்ணத்தை தவிர்த்து, முடியும் என்ற முடிவோடு செயல்பட்டால், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே, பொருளாதார நெருக் கடி காலத்தில் சிக்கித்தவித்தன. ஆனால் இந்தியா மட்டும் பொருளாதார நெருக்கடிக்கு அதிகம் பாதிக்கவில்லை. பொருளாதார நெருக்கடி விஷயத்தில், உலக நாடுகளை நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நம்மால், லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம், ஊழலை எதிர்த்து செயல்பட்டால், வறுமையற்ற நாடாக இந்தியா உருவாகும், என்றார்.ஊழல் எதிர்ப்பு இயக்க மாநில செயலாளர் அரசு பேசுகையில், ""லஞ்சம், ஊழலை ஒழிக்க கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள், இளைஞர்களை கொண்டு குழுக்கள் ஏற்படுத்தி, அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்,'' என்றார்.விழாவில், கோவை மாவட்ட ஊழல் இயக்க தலைவர் குமாரவேலு உட்பட பலர் பேசினர். பின், திருப்பூர் மாவட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிதம்பரம், துணை தலைவராக கண்ணப்பன், செயலாளராக நாகராஜன், துணை செயலாளராக சாமிநாதன், பொருளாளராக வெங்கடராஜ் தேர்வு செய் யப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களாக சிவராஜ், விஸ்வநாதன், மக்கள் மாமன்ற தலைவர் சுப்ரமணியம், கோவிந்தராஜ், சுப்ரமணியம், ருத்ரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக