புதியவை :

Grab the widget  Tech Dreams

11 அக்டோபர் 2009

புழல் ஜெயிலில் ஆபாச படம் : 6 அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை.லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிரம்

சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும் அங்குள்ள கைதிகளுக்கு காசு கொடுத்தால் கஞ்சா முதல் ஆபாச படம் வரை அனைத்து வசதியும் கிடைக்கிறது என லஞ்சஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக, புழல் ஜெயிலில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். கைதிகளின் அறை மட்டுமில்லாமல் ஜெயிலர்கள் அறையையும் அலசி ஆராய்ந்தனர்.
பகல் 1 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. அப்போது ஏராளமான சிகரெட், பீடி பண்டல்கள், 3 டி.வி. செட்கள், ஏராளமான ஆபாச சி.டி.க்கள், கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன்கள், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சோம சுந்தரத்திடம் லஞ்சப்பணம் ரூ.1,500-ம், 2 துணை ஜெயிலர் களிடம் ரூ.1700 பணமும் 21 ஆபாச சி.டி.க்களும் சிக்கியது.
ஜெயிலரின் அறை “குட்டி” மளிகை கடை போல் காட்சி அளித்தது. அங்கிருந்து பண்டல் பண்டலாக பீடி, சிகரெட்டுகள் சிக்கியது. கத்தியும், கத்திரிகோலும் கைப்பற்றப்பட்டது.
கைதிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எல்லை மீறி ஜெயில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தண்டனை கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் 1 மாதத் திற்கான பணத்தை கொடுத்து விடுகின்றனர். அந்த தொகைக்கு ஏற்றாற் போல் கைதிகளுக்கு தேவை யான பீடி, சிகரெட், மொபைல் வீடியோ சர்வீஸ் வழங்கப்படுகிறது.
வழக்கமாக போலீசார் நடத்தும் சோதனையில் கைதிகள்தான் சிக்குவார்கள். ஆனால் இந்த முறை முறைகேடான ஜெயில் அதிகாரிகள் வசமாக மாட்டிக் கொண்டனர்.

ஒரு ஜெயிலர், 2 உதவி ஜெயிலர்கள், மருத்துவ அதிகாரி, 2 வார்டன்கள் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் பட்டியலில் உள்ளது. அவர்களுக்கு உதவியாக இருக்கும் சிறை காவலர்கள் பெயர் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

இந்த சோதனை பற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜெயிலுக்குள் சத்தமில்லாமல் தனி உலகம் செயல்பட்டு வருகிறது. வசதி உள்ள கைதிகளுக்கு பணம் கொடுத்தால் எல்லாமே கிடைக்கும். அங்கு காற்றை தவிர கைதிகளுக்கு எல்லாமே காசுதான். அந்த அளவுக்கு சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். 9 மணி நேரம் சோதனை நடத்தினோம். எங்களது எந்த கேள்விக்கும் அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை.
குற்றவாளி திருந்த ஜெயில் ஒரு பாடமாக இருக்கும் என்று வெளியில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உள்ளே வந்து பார்த்தால்தான் உண்மை தெரிகிறது குற்ற வாளிகளை தயார் செய்யும் பள்ளிக் கூடமாக ஜெயில் விளங்குகிறது. 6 அதிகாரிகள் மீது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தி மற்ற நபர்கள் மீதும் தீவிர நட வடிக்கைக்கு பரிந்துரைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புழல் ஜெயிலில் ஏ.டி.ஜி.பி., டி.ஐ.ஜி., 3 போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டு கள், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், முதன்மை தலைமை வார்டர் கள், தலைமை வார்டர்கள், முதன்மை தலைமை ஜெயிலர்கள், தலைமை ஜெயிலர்கள், ஜெயிலர்கள் என 211 பேர் பணியில் உள்ளனர்.
இவர்களில் உயர் அதிகாரிகளின் கண்ணை தப்பி ஜெயிலர்கள், வார்டர்கள் அடிக்கடி இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
சென்னை சென்ட்ரலில் மத்திய சிறை இருந்தபோது இவ்வளவு அதிகாரிகள் இல்லை. 20 சதவீத ஊழியர்கள் அதிகமாக புழல் சிறையில் பணியில் உள்ளனர். ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் யாரும் சிறை அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டு கொள்வதில்லை.
முன்பு புழல் ஜெயிலில் பலமுறை கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளும், செல்போன்களும் கைதி களிடம் இருந்து சிக்கியது. இப்போது முதன் முதலாக ஜெயிலர்களிடம் இருந்து முறைகேடான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக