புதியவை :

Grab the widget  Tech Dreams

13 அக்டோபர் 2009

கோவை மத்திய சிறையில் அதிரடி சோதனைகோவை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான சிகரெட், பீடி பண்டல்கள், டி.வி.க்கள், ஆபாச சி.டி.க்கள் மற்றும் கணக்கில் வராத ஏராளமான பணம சிக்கியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் அதிரடி சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று (13.10.09) கோவை மத்திய சிறையில் அதிரடி சோதனை தொடங்கியது. ஜெயிலில் உள்ள ஒவ்வொரு அறையும் முழுமையாக சோதனையிடப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வûகையில் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஏதும் சிக்கியதா என்பது தெரியவில்லை. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கைதிகளிடையேயும், ஜெயில் வளாகத்திலும் பரபரப்பு நிலவியது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக