புதியவை :

Grab the widget  Tech Dreams

07 அக்டோபர் 2009

ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.11,600 லஞ்சப்பணம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு புகார்கள் வந்தது.

தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமொவுலி, எம். நடராஜன், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரி தங்கராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு 7மணிக்கு திடீரென சார்-பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடி சோதனை செய்தனர்.அப்போது அங்கு பணியாற்றி வரும் உதவியாளர் என்.ராஜன்(வயது 43) என்பவர் பணத்தை எடுத்து தனது சட்டை பாக்கெட்டில் மறைத்தார். இதை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் ரூ.11,600 இருந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் குறித்து சார்பதிவாளர் சுப்புகிருஷ்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ராஜன் வைத்து இருந்தது லஞ்ச பணம் என தெரியவந்தது. இதை யார் யார் கொடுத்தனர்? என்று விசாரித்தனர்.இந்த பணம் யார் யார் தந்தது என்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.

நேற்று மட்டும் 60பேர் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் யார் யார் லஞ்சப்பணம் கொடுத்தார்கள் என்றும் விசாரணை நடந்து வருகிறது.லஞ்ச பணம் சிக்கியதால் இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தும் உள்ளனர்.

இதுபற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக