புதியவை :

Grab the widget  Tech Dreams

30 அக்டோபர் 2009

கோபி பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்துள்ள வலை.கலக்கத்தில் கையூட்டு வாங்குபவர்கள் !கோபி, அக். 30- கோபி கச்சேரி மேட்டில் தாலுகா அலுவலகம், கருவூலம், மின்வாரிய அலுவலகம், நகரசபை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவை உள்ளது. இதேபோல் கோபி பார்க் வீதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், மார்க்கெட் வீதியில் சார்பதிவாளர் அலுவலகம், மொடச்சூர் ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகமும் உள்ளது. மேலும் கல்வி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகமும் உள்ளது.

மேற்கண்ட அரசு அலுவலகங்களில் யார்-யார் தினமும் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பட்டியல் போட்டு அனுப்பி உள்ளனர். இதில் ஒரு அதிகாரி 2 நாட்களுக்கு ஒரு முறையும், வாரத்துக்கு ஒரு தடவையும் வாங்கும் லஞ்சப்பணத்தை ஆள் மூலம் வெளியே கொடுத்து விடுகிறாராம். இன்னொரு அதிகாரியோ தனது கார் டிரைவர் மூலம் லஞ்சப் பணத்தை கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிடுகிறாராம்.
இந்த தகவல் எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியமாக சென்று உள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த புகார்களால் உஷாரான லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது கோபியில் முகாமிட்டு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், அலுவலர்கள் குறித்து ரகசிய சர்வே எடுத்து வருகிறார்கள்.போலீசார் மாறுவேடத்தில் நகரில் உள்ள ஒவ்வொரு டீக்கடை, ஓட்டல்களுக்கும் சென்று எந்தெந்த துறை அதிகாரிகள் எப்படியெல்லாம் கையூட்டு பெற்று வருகிறார்கள்? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

இதனால் கோபியில் விரைவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்துள்ள வலையில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக