புதியவை :

Grab the widget  Tech Dreams

22 அக்டோபர் 2009

பழநி மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் கைதுதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளரை போலீசார் கைது செய்தனர். இங்கு லஞ்சம் கொடிகட்டிப்பறப்பதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலையில் அதிரடியாக வந்தனர். இங்கு அதிகாரிகள் , ஊழியர்களிடம் விசாரணை நடத்தி ஆவணங்கள் சோதிக்கப்பட்டது. பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த நாகராஜன் த்ரீ பேஸ் கரன்ட் வாங்கிட அணுகியபோது ரூ. 5 ஆயிரம் தருமாறு உதவி பொறியாளர் ராஜேந்திரன் கேட்டுள்ளார். இவருக்கு பணம் கொடுக்கும் போது லஞ்ச போலீசார் கையும்களவுமாக பிடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக