புதியவை :

Grab the widget  Tech Dreams

08 அக்டோபர் 2009

தனியார் பள்ளி ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய அரசு உழியர்கள் கைது .

கோவை : பணி நிரந்தரம் செய்வதற்க்காக,அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலகஉழியர்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர் .

மேட்டுபாளையம் ஜெ.எம் .ஆர்.சி .பள்ளி ஆசிரியை ஸ்டெல்லா மேரி,பணி நிரந்தரம் செய்ய கோரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை நாடினார் .

இங்கு உதவியாளராக பணியாற்றும் பாலசந்திரன் மற்றும் டிரைவர் பாண்டியன் அக்7ந்த் தேதி 20ஆயிரம் ருபாயை புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு கொண்டு வந்து தரும்படி கூறினர் .இதை தொடர்ந்து ,மேரி லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தார் .
பொலிசாரின் அறிவுறுத்தலின்படி மேரி, பாலச்சந்திரன் கூறிய இடத்திற்கு பணத்துடன் வந்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன்,குணசேகரன்,உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து பாலச்சந்திரன் டிரைவர் பாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக