புதியவை :

Grab the widget  Tech Dreams

27 அக்டோபர் 2009

10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்!நெல்லை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் வந்ததில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தி 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் டிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் மேற்பார்வையில், 41 பிரிவுகள் மூலம் 24 டிஎஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் லஞ்ச ஓழிப்பு பிரிவு இயங்கி வருகிறது.

மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஓழி்ப்பு துறை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வருவாய்துறை, பத்திர பதிவு துறை, வட்டார கழக போக்குவரத்து அலுவலகங்கள், உள்ளாட்சிதுறை, கல்விதுறை, காவல்துறை, குடிநீர் வழங்கல்துறை, சுகாதாரதுறை, வனத்துறை ஆகிய பல்வேறு துறைகளில் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 491 புகார்கள் வந்துள்ளது.

இதில் இரண்டாயிரத்து 494 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு . விசாரணை நடத்தியதில் மாநிலம் முழுவதும் 456 பேர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் மூலம் குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக