09 பிப்ரவரி 2010
ரூ. 2,000 லஞ்சம்: செல்லியம்பட்டி வி.ஏ.ஓ., முனிராஜி கைது .
தர்மபுரியை அடுத்த நிம்மாங்கரையைச் சேர்ந்தவர் விவசாயி தீர்த்தகிரி. இவரது சித்தப்பா மகன் பெருமாள். இவர்கள் இருவருக்கும் இவர்களது தாத்தா சொத்தை பாகம் பிரிக்க வேண்டியது இருந்ததால், நிலத்தை சர்வே செய்ய பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2009 நவம்பரில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
கடந்த 2009 நவம்பர் 13ம் தேதி சர்வேயர் சந்திரன் நிலத்தை சர்வே செய்து கொடுத்தார். தீர்த்தகிரியும், பெருமாளும் நிலத்தை பிரித்த பின் தங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் கேட்டு செல்லியம்பட்டி (பொறுப்பு) வி.ஏ.ஓ., முனிராஜிடம் மனு கொடுத்தனர்.
அவர், "லஞ்சமாக 2,500 ரூபாய் கொடுத்தால் தான் பட்டா பெயர் மாற்றி தருவதாக' கூறி வந்தார். கடந்த 5ம் தேதி தீர்த்தகிரியும், பெருமாளும் மீண்டும் பட்டா கேட்ட சென்ற போது, முனிராஜ் 2,000 ரூபாய் கொடுத்தால் பட்டா தருவதாக கூறி திருப்பி அனுப்பி வைத்தார். அதிர்ச்சியடைந்த தீர்த்தகிரி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரைப்படி நேற்று காலை செல்லிம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்ற தீர்த்தகிரி, முனிராஜிடம் 2,000 ரூபாய் பணம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், முனிராஜை கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக