08 பிப்ரவரி 2010
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் : பெண் தீக்குளி்க்க முயற்சி
கடையநல்லூர் நகராட்சி முன்பு இன்று காலை ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 2வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமுதா கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தனது வீட்டிற்கு மின் இணைப்புக்கு கொடுப்பது சம்பந்தமாக வீட்டு தீர்வை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுவரை வீட்டு தீர்வை கட்டாதவர் மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டு தீர்வை கட்ட முன்வந்ததை அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த 3 மாதங்களாக அமுதாவை அலைக்கழித்துள்ளனர்.
இதனால மனமுடைந்த அமுதா இன்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வீட்டு வரி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமுதா கூறுகையில், எனது வீட்டிற்கு தீர்வை கட்ட வேண்டுமென்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும்என கேட்டனர். என்னிடம் அவ்வளவு பணவசதி இல்லை என்றேன்.
இதனாலேயே வரி விதிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். மனமுடைந்த நிலையில்தான் இன்று தீக்குளிக்க முயற்சித்தேன்' என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
naammai maaiththaalum lanchcham oliyaathu. paavam makkal thammai maaippathai vida ketpavanai theek kirai aakkinaal ini lanchcham vangkupavarkal payappatuvaarkal. makkale maththi yosingka/
பதிலளிநீக்கு