புதியவை :

Grab the widget  Tech Dreams

23 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட்


லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, புதுக்கோட்டை குற்றப்பிரிவு எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதுக்கோட்டையில் தனிப்படை போலீஸ் (குற்றப் பிரிவு) எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்துக்குட்பட்ட புதுக்கோட்டை டவுன், அறந்தாங்கி, விராலிமலை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.ஐ., யாக பணியாற்றியவர்.சில மாதங்களுக்கு முன் பணிமாறுதல் பெற்றுச் சென்ற இவர், திருநெல்வேலியில் வீடியோ பைரசி போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். அங்கு திருட்டு "சிடி'க்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், 2009 செப்., 22ம் தேதி அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.ஐ., மனோகரகுமார் தலைமையில் போலீசார் திருநெல்வேலி டவுன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வீடியோ பைரசி போலீஸ் பிரிவுக்கு சொந்தமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 919 புதுபட "விசிடி'க்கள் மற்றும் 2,000 ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வாகனத்தில் எஸ்.ஐ., அன்பழகன் உட்பட ஐந்து போலீசார் இருந்தனர். "விசிடி' மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., அன்பழகன் உட்பட ஐந்து போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கைக்காக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே புதுக்கோட்டைக்கு மீண்டும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ., அன்பழகன் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார். அவர் திருநெல்வேலியில் லஞ்சம் வாங்கியதற்காக நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக