புதியவை :

Grab the widget  Tech Dreams

07 பிப்ரவரி 2010

சிவசேனா என்பது குரங்குபடை நடிகை காஜோல் கிண்டல்


நடிகை காஜோல் சிவசேனா கட்சியை கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணையத்தளத்தில் எழுதி இருப்பதாவது:-

சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள்.

சிவசேனாவை குரங்குகளின் படை என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு படையால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை.

இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும்.

இவ்வாறு நடிகை காஜோல் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக