புதியவை :

Grab the widget  Tech Dreams

11 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய அதிகாரி உட்பட 2 பேருக்கு சிறை


வீட்டுவரி விதிப்பு நகல் கேட்டவரிடம் லஞ்சம் வாங்கிய டவுன்பஞ்சாயத்து அதிகாரி உள்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள மாதவன் குளத்தை சேர்ந்தவர் முருகேசன்(57). 1997ல் தமது வீட்டிற்கு வரிசெலுத்தியதற்கான 10 ஆண்டுகளின் நகல்களை கேட்டு திசையன்விளை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

டவுன் பஞ்., நிர்வாகஅதிகாரி சுப்பையா, உதவியாளர் பரமேஸ்வரன் ஆகியோர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். இதுகுறித்த முருகேசன் நெல்லை லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி முருகேசன், கொடுத்த 450 ரூபாய் லஞ்சப்பணத்தை பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு நெல்லை தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன் பிரகாஷ், டவுன் பஞ்.,அதிகாரி சுப்பையா, உதவியாளர் பரமேஸ்வரன் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக