
மதுரையை சேர்ந்தவர் வக்கீல் முகமது ரபீ. இவர், 2003 மே 23ல் மேலக்கால் - துவரிமான் ரோட்டில் சுமோ காரில் டிரைவிங் பழகினார்.
அவ்வழியாக வந்த நாகமலை போலீஸ் எஸ்.ஐ., பாபு, ஏட்டு குழந்தை ஆகியோர் காரை மறித்து சோதனை நடத்தினர். பின், முகமது ரபீயிடம் இருந்த 4,100 ரூபாய், வாட்ச், மொபைல் போனை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட முகமதுரபீ தாக்கப்பட்டார்.
எஸ்.ஐ., ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டாவது விரைவு கோர்ட்டில் முகமதுரபீ வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி ராதா குற்றம் சுமத்தப்பட்டோரது குற்றங்கள் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், எஸ்.ஐ., பாபுவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தும், 2,500 ரூபாய் அபராதம், 5,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.ஏட்டு குழந்தை விடுவிக்கப்பட்டார்.
.பாபு தற்போது தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக