புதியவை :

Grab the widget  Tech Dreams

01 பிப்ரவரி 2010

ஜே.பி.ஜே. நிறுவன சொத்துக்கள் முடக்கம்



ஜே.பி.ஜே. நிறுவனத்தின் ரூ.10 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. திலகவதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. திலகவதி,

ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக 2233 பேர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவாருர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அலுவலகங்களில் 8 தனிப்படைகளின் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் 219 இடங்களுக்கான நில ஆவணங்கள், 4 சொகுசு கார்கள், 1 மோட்டார் சைக்கிள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 கோடி மதிப்புள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.25 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 50 ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.

இந்த வழக்கில் ஜஸ்டின் தேவதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு அடுத்தபடியாக அவரது மனைவி பெல்லா ஜஸ்டின், சாமுவேல்நடேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களது பாஸ் போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் தேவதாஸ் தனது அலுவலக உள் அலங்கார வேலைக்கு மட்டும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளார். எங்களது முக்கிய குறிக்கோள் பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு அதை மீட்டுக்கொடுப்பதுதான். அதைவிடுத்து இந்த மோசடியின் பின்னணியில் வி.ஐ.பி.க்கள் இருக்கிறார்களா? யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது. என்று விசாரித்து வழக்கை வளர்ப்பதற்கு விரும்பவில்லை. மறைமுகமாக இந்த மோசடியில் தொடர்புள்ள ஏஜெண்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜஸ்டின் தேவதாஸ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் நிலமில்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி நல்லது செய்ய நினைத்தேன். ஏஜெண்டுகள் என்னை ஏமாற்றியதால் இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கவைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

செங்குன்றம் அடுத்த பெருங்காவூரில் உள்ள 200 பிளாட்டுகளை 25 ஆயிரம் பேருக்கு விற்பதற்காக
காட்டியுள்ளனர். தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து வருகிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக