நேற்று முன்தினம் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:
நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது.
நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும்.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
---------------------------------------------------------------------------------
போகிற போக்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டால் அது லஞ்சமாக கருத படமாட்டாது என்று வாங்கும் லிமிட்டை அரசாங்கமே அறிவித்துவிடும் போலிருக்கிறது.
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக