17 பிப்ரவரி 2010
நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டு சிறை ! வருகிறது சட்டம் !
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் அல்லது அரசுக்கு அளித்த உறுதி மொழிகளை காப்பாற்ற தவறும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இந்த மசோதாவுக்கு, விவசாய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நிறைவேறினால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் வேறு எந்த வகையான முறைகேடுகளில் ஈடுபட்டாலும், கடும் தண்டனை கிடைக்கும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் சமர்ப்பித்த இந்த மசோதாவை, சிறு மாற்றங்களுடன் அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டது. இதன்பின் மத்திய அமைச்சரவை மற்றும் பார்லிமென்டின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அமைச்சர்கள் குழுவில் பவார், கபில்சிபல் தவிர, ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், பிருதிவிராஜ் சவான், வீரப்ப மொய்லி, திட்ட கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக