14 பிப்ரவரி 2010
செபி அதிகாரியின் வங்கி லாக்கரில் ரூ. 1 கோடி: சி.பி.ஐ.-யிடம் சிக்கியது
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய பங்கு பரிவர்த்தனை வாரிய (செபி) அதிகாரியின் வங்கி லாக்கர்களில் இருந்த ரூ. 1.29 கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்த விவரம்: கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆர்.பி. சிங். இவர் செபி சந்தை கட்டுப்பாட்டுப் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். சில நிறுவனங்களின் ஆவணங்களை மாற்றித் தர ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக. ஜனவரி 27-ல் ஆர்.பி. சிங்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அவரது வங்கி லாக்கர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை சோதித்தனர். அப்போது 3 வங்கி லாக்கர்களில் இருந்த ரூ. 1.29 கோடி பணம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆர்.பி. சிங் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ. 28 லட்சம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக