புதியவை :

Grab the widget  Tech Dreams

25 பிப்ரவரி 2010

நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது


ஆந்திராவில், நீதிபதி மீது செருப்பு வீசிய கோர்ட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். கர்னூலை சேர்ந்தவர் ராதாராணி. இவர், நான்காவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்தக் கோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் சண்முகம்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கோர்ட்டுக்கு ராதாராணி வந்தார். அப்போது, தனது செருப்பை கழற்றாமல் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார். இதை கவனித்த நீதிபதி சண்முகம், செருப்புக் காலுடன் கோர்ட்டுக்கு வருவதற்கு பதிலாக, செருப்பை தலையில் சுமந்தபடியே வரலாமே என, கமென்ட் அடித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ராதாராணி, தனது செருப்பைக் கழற்றி நீதிபதி சண்முகத்தை நோக்கி வீசினார். அதிஷ்டவசமாக, செருப்பு அவர் மீது படாமல் சென்றது.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நீதிபதி சண்முகம், விசாரணையை ஒத்திவைத்தார். அத்துடன், ராதாராணியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்தார். அதன் பேரில், ராதாராணியை போலீசார் கைது செய்தனர்.ராதா ராணியை கடந்த ஏழு மாதங்களாக நீதிபதி சண்முகம் பல்வேறு வகைகளிலும் அவமானப்படுத்தி வந்ததுடன், மன அளவிலும் தனக்கு தொந்தரவுகளை செய்து வந்ததாக நிருபர்களிடம் பேசிய ராதாராணி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக