புதியவை :

Grab the widget  Tech Dreams

11 பிப்ரவரி 2010

ரூ.500 கோடி சொத்து !லஞ்ச அதிகாரி சஸ்பெண்ட்


கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை சஸ்பெண்ட் செய்து சட்டீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டது.

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எல்.அகர்வால். மாநில வேளாண்மை துறை செயலாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி அகர்வால் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அவர் வருமான வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சொத்து மதிப்பு ரூ.500 கோடியாகும். அவருக்கு 220 வங்கிகளில் கணக்கு இருப்பது தெரியவந்தது. அதில் ரூ.40 கோடி பணம் இருந்தது. இதற்கிடையே ரூ.500 கோடிக்கு மேல் சொத்து குவித்த அகர்வாலை சட்டீஸ்கர் அரசு சஸ்பெண்ட் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக