புதியவை :

Grab the widget  Tech Dreams

26 பிப்ரவரி 2010

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கிருபானந்தன் கைது




என்.எல்.சி. நிறுவனங்களில் காண்டிராக்டர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்தன. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட என்.எல்.சி. நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நெய்வேலி இல்லத்திலும் அதிரடி சோதனை நடந்தது.

இந்த அலுவலகத்தில் பொது மேலாளராக இருப்பவர் கிருபானந்தன் (50). இவருக்கு கீழ் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொது மேலாளர் கிருபானந்தன் மீது சி.பி.ஐ.க்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பெறுவதில் காண்டிராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

இந்த போட்டியை கிருபானந்தன், தனக்கு சாதகமாக பயன்படுத்தி காண்டிராக்டர்களிடம் பேரம் பேசி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்.எல்.சி. இல்லம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காண்டிராக்டர் ஒருவர் பொதுமேலாளர் கிருபானந்தனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்றார். ஏற்கனவே பேசியபடி தனக்கு ஒதுக்கப்பட்ட உள்ள ஒப்பந்த பணிக்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார். அதை பொது மேலாளர் கிருபானந்தன் பெற்றுக் கொண்டார்.

அப்போது அங்கு மறைந் திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கிருபானந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று கிருபானந்தன் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கிருபானந்தனின் வீடு தி.நகரில் உள்ளது. அவரது வீட்டில் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சொத்து ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சி.பி.ஐ. நடத்திய அதிரடி வேட்டையில் என்.எல்.சி. அதிகாரி ஒருவர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக