14 பிப்ரவரி 2010
ஊழலை ஒழிக்கும் பணியில், அரசு சார்பற்ற அமைப்பு !
ஊழலை ஒழிக்கும் பணியில், அரசு சார்பற்ற அமைப்புகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ள மத்திய கண்காணிப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை கண்காணிப்பு ஆணையர் பிரத்யூஷ் சின்கா கூறியதாவது:
ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதை முழுமையாக செயல்படுத்தவும், சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை கொண்டுவரவும் அரசு சார்பற்ற அமைப்புகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அரசு சார்பற்ற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.அரசு சார்பற்ற அமைப்புகள் பல மக்களுக்கு தேவையான நல்ல பணிகளைச் செய்து வருகின்றன. அவர்கள் எங்களுடன் சேர்ந்தால், ஊழலை ஒழிக்கும் பணி அதி தீவிரம் அடையும். ஊழலில் ஈடுபடுவோரை தண்டிப்பதில் அக்கறை காட்டுவதை விட, இந்த முறைகேடுகள் இனி வரும் காலங்களிலும் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு கடந்த அக்டோபர் மாதத்தில் 807 புகார்களும், நவம்பர் மாதத்தில் 728 புகார்களும் வந்துள்ளன. அவற்றை தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளோம். இவ்வாறு சின்கா கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக