புதியவை :

Grab the widget  Tech Dreams

27 பிப்ரவரி 2010

ஆயிரம் ரூபாய்க்கு போலி சான்றிதழ் : வி.ஏ.ஓ.,தலையாரி உட்பட 3 பேர் கைது


ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,தலையாரி கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அச்சம்பட்டியை சேர்ந்த ஆசீர்வாதம் மகள் அன்னமணி(39) என்பவர் வாரிசு சான்றிதழ் கோரி திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

வாரிசு சான்றிதழ் தர தலையாரி சுப்பையா ரூ. ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். மேலும் தலையாரி, கிராம நிர்வாக அதிகாரி செந்தில்முருகன்(28) ஆகியோர் சேர்ந்து நெல்லை தாசில்தார் கையெழுத்து போட்டது போல போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து கொடுத்தனர்.

அன்னமணி, அந்த சான்றிதழுடன் பூர்வீக சொத்துக்கு பட்டா மாற்றத்துக்கு நெல்லை தாலுகா அலுவலகத்தின் விண்ணப்பித்தார். அந்த சான்றிதழை பார்த்த தாசில்தார் அந்தோணிமுத்து அதிர்ச்சியடைந்தார்.

அச்சு அசலாய் தமது கையெழுத்து போட்டு போலி சான்றிதழ் கொடுத்தது குறித்து நெல்லை எஸ்.பி.,ஆஸ்ரா கார்க்கிடம் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து போலி சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,செந்தில்முருகன், தலையாரி சுப்பையா, மனுதாரர் அன்னமணி ஆகியோரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக