02 பிப்ரவரி 2010
ரூ.7 கோடி ஏமாற்றி விட்டனர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு பரபரப்பு புகார்
காமெடி நடிகர் வடிவேலு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று மதியம் 12 மணிக்கு வந்தார். அவர் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து புகார் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என என்னிடம் ஆசை காட்டினார்கள். அதை நம்பி முன்பின் அனுபவம் இல்லாத ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன்.
புதிதாக நிலங்கள் வாங்கி தருவதாக சொல்லி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7 கோடி முதல் பணம் வாங்கிக் கொண்டனர். என்னை மோசடி செய்யும் விதமாக அரசுக்கு சொந்தமான சுடுகாட்டு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் போலி ஆவணம் தயாரித்து என்னிடம் விற்று விட்டனர்.
இதற்கு சில நில புரோக்கர்கள் உடந்தையாக இருந்துள்ளார்கள். மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்டபோது ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரிடம் தகுந்த ஆதாரங்களுடன் புகார் மனுவுடன் வரும்படி கூறினார்.பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:- மாலையில் உங்களை சந்தித்து முழு விவரங்களையும் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக