புதியவை :

Grab the widget  Tech Dreams

02 பிப்ரவரி 2010

ரூ.2500 லஞ்சம்:கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ் கைது


விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மின் இணைப்பு வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி புதுவீட்டுச்சந்து தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 40). இவர் கள்ளக்குறிச்சியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலத்தில் வீடு கட்டும் பணியை துவக்கிய பக்தவச்சலம், மூன்று மாதங்களுக்கு முன் உதவி மின்சார பொறியாளர் அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

மின் கம்பம் நடவேண்டும் என்று கடந்த 29ந் தேதி அழைக்கப்பட்ட தால் பக்தவச்சலம் கள்ளக்குறிச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணிபுரியும் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார்.

பக்தவச்சலம் விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் எடுத்த நடவடிக்கையில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக