புதியவை :

Grab the widget  Tech Dreams

27 பிப்ரவரி 2010

சுயஉதவிக்குழு நடத்திரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் கைது


திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிரமபுத்திர பெண்கள் இணைப்பு குழுவின் கீழ், 237 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செம்பகனூர் மரிய ஜெயா இருந்துள்ளார். இவர், உறுப்பினர்களுக்கு தேவையான வங்கிக் கடன்களை பெற்றுத் தருவதும், இந்த பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டுவதாக கூறி கிராம பெண்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கையாடல் செய்து தலைமறைவானார்.

இவருக்கு உதவியாக விமலாராணி, தனபாக்கியம், ஆரோக்கிய செல்வி, லாரன்ஸ் செல்வி, மெர்சி, ஜாகீர்லூர்துராஜ் ஆகியோர் செயல்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், கடந்த வாரம் கொடைக்கானல் செம்பகனூர் சுயஉதவிக்குழு அலுவலகம் அருகே நடந்து சென்ற இந்த குழுவை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை கேட்டில் கட்டி வைத்து, மறியல் செய்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து இவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குழுவில் பணியாற்றிய கொடைக்கானல் லேக் ரோட்டை சேர்ந்த லாரன்ஸ் செல்வி(43)யை கைது செய்து, திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உமாராணி உத்தரவிட்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:சுயஉதவிக்குழு நடத்தி கிராம மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியில் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் இன்னும் ஏழு பேர் தலைமறைவாகினர். இவர்களை தேடி வருகிறோம், என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக