புதியவை :

Grab the widget  Tech Dreams

16 பிப்ரவரி 2010

லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அதிகாரி கைது


தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உமையாள் புரத்தைச் சேர்ந்த பாரதி. இவர் வெளிநாட்டில் வசிப்பவர். இவர் தனது ரேஷன் கார்டில் பெயரை மாற்றுவதற்காக வட்ட வழங்கல் அதிகாரி தட்சிணாமூர்த்தியிடம் மனு கொடுத்தார்.

உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர ரூ. ஆயிரம் தரகோரி, பாரதியிடம் தட்சிணாமூர்த்தி கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., ரங்கராஜனிடம் பாரதி புகார் கொடுத்தார்.

போலீசாரின் அறிவுரையின் பேரில், தட்சிணாமூர்த்தியிடம் பாரதி ஆயிரம் ரூபாய் கொடுத்த போது, தட்சிணாமூர்த்தியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

1 கருத்து:

  1. நாமாக உணர்ந்து லஞ்சம் குடுப்பதை நிறுத்தாத வரை
    லஞ்சம் வாங்குவோர் திருந்த மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு