26 பிப்ரவரி 2010
வங்கி மோசடிகளால் ரூ.5,500 கோடி இழப்பு
"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.
டில்லியில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மத்திய கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளின் இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் கூறுகையில்,"கடந்த நான்கு நிதியாண்டுகளில், நடந்த மோசடிகளால், வங்கித் துறைக்கு 5,517 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில், இத்தகைய மோசடிகளால், வங்கித்துறைகளுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடு, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
இதுகுறித்து சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ் பால் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2005-06, 2006-07, 2007-08 மற்றும் 2008-09ம் நிதியாண்டுகளில், நிகழ்ந்துள்ள 733 மோசடி சம்பவங்களால், வங்கித் துறைகளுக்கு முறையே, 1,381 கோடி ரூபாய், 1,194 கோடி ரூபாய், 1,059 கோடி ரூபாய் மற்றும் 1,883 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். இதை தவிர, கடன்கள், எலக்ட்ரானிக் முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக